நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்து கிடந்தன. இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் அரசியல் வசனம் பேசி ரசிகர்களை உசுப்பேற்றியே படங்களை வெற்றிபெறச் செய்ததாக ரஜினி மீது நீண்ட காலமாகவே ஒரு விமர்சனம் உண்டு. இறுதியாக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல என முழக்கமிட்டு கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினார். ஆனால், திடீரென பின்வாங்கினர். அதற்கு தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும் தலைவரின் உடல் நலம் முக்கியம் என மனதை தேற்றிக் கொண்டனர். ஆனால் விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் அரசியலில் தைரியமாக நுழைந்தனர். அந்த லிஸ்டில் நடிகர் விஜயும் இணைந்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. திரையுலகிலிருந்து விலகி அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய் தமிழகமெங்கும் சுற்றிப்பயணம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது. இது பல ரசியல் கட்சிகளை அதிர செய்துள்ளது.
இந்த நிலையில் புளுசட்டை மாறன் ஒரு ட்விட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில்,
இந்த தேர்தலில் தவெக தோற்றால்.. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலீவர்தான். ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலீவர்தான்.
25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார்.
2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார்.
25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும்.. அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள். ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை.
சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும்.. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம். ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது.
சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார்.
கதறுங்க தலீவரே. கதறுங்க என்று பதிவிட்டுள்ளார்.