கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் தற்போதைய பெரிய தலைவலியே இந்த ‘லேட் நைட்’ மீட்டிங்குகள் தான். அந்த வகையில், மாலை 7 மணிக்கு மீட்டிங் போட்ட மேனேஜரை, ஊழியர் ஒருவர் திட்டித் தீர்த்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த நபர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் மேனேஜரைப் பற்றி, “இவனை எல்லாம் யாரு மேனேஜர் ஆக்குனாங்கன்னு தெரியலையே” எனத் புலம்பிக் கொண்டிருக்க, எதிர்பாராதவிதமாக அவரது மைக் ‘ஆன்’ (Unmute) நிலையில் இருந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், உடனே அவரை எச்சரித்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அலுவலக வேலை நேரத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருவதாகப் பலரும் விவாதித்து வருகின்றனர். “உங்க மேனேஜருக்கும் இதே நிலைமை தான்” என சிலர் கிண்டலாகப் பின்னூட்டம் இட்டாலும், வேலை நேரத்தைத் தாண்டி மீட்டிங் வைக்கும் கலாச்சாரம் மாற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த ஒரு சின்ன வீடியோ, தற்போது ஒட்டுமொத்த கார்ப்பரேட் ஊழியர்களின் மனக்குமுறலாக மாறியுள்ளது.