சீமான் தொகுதியில் விஜய்.. என்ன பேசுவார்.. எகிறும் எதிர்பார்ப்பு... இன்று காரைக்குடியில் பிரசாரம்!
Dinamaalai April 10, 2026 12:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொள்கிறார்.

காரைக்குடி தொகுதி இந்தத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் காரணம், இங்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகக் களம் இறங்கியிருப்பது தான்.

காங்கிரஸ் சார்பில் மாங்குடி மற்றும் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி ஆகியோர் ஏற்கனவே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தவெக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து விஜய் இன்று பிரச்சாரம் செய்கிறார். இன்று மதியம் 12 மணி அளவில் காரைக்குடியில் தனது பரப்புரையைத் தொடங்கும் விஜய், வழக்கம் போலன்றி இன்று சற்றே வித்தியாசமான முறையில் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சீமான் போட்டியிடும் தொகுதியிலேயே விஜய் தனது வேட்பாளருக்காகக் களமிறங்குவது, வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. விஜய்யின் வருகையையொட்டி காரைக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தவெக தொண்டர்கள் உற்சாகமாகக் குவிந்து வருகின்றனர்.

மதியம் 12 மணிக்குத் தொடங்கும் இந்தப் பிரச்சாரத்தின் போது விஜய் பேசப்போகும் அரசியல் கருத்துக்கள் மற்றும் சீமான் மீதான அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.