“அண்ணன்கிட்ட கேள்வி கேட்க பயமா கனிமொழி?” – திமுகவை கிழித்துத் தொங்கவிட்ட குஷ்பு…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!
SeithiSolai Tamil April 10, 2026 12:48 PM

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார். மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்முறைகள் குறித்து திமுக எம்பி கனிமொழி ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “பெண்கள் உரிமைகளுக்காகப் பேசும் கனிமொழி, இப்போது தனது அண்ணனிடம் (முதலமைச்சர் ஸ்டாலின்) கேள்வி கேட்கப் பயப்படுகிறாரா?” என மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

மேலும், திமுகவினர் பெண்களை வெறும் பாலியல் பொருளாக மட்டுமே பார்ப்பதாகவும், அத்தகைய மனநிலை அக்கட்சியினரிடம் இருப்பதால்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குஷ்புவின் இந்த நேரடித் தாக்குதல் திமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், பெண்களின் பாதுகாப்பு குறித்த இந்த விவாதம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.