தமிழகத்தில் 2,460 வேட்புமனுக்கள் அதிரடி நிராகரிப்பு... தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம்!
Dinamaalai April 10, 2026 03:48 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழா  ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை விறுவிறுப்பாக முடிவடைந்துள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,599 வேட்புமனுக்களில் பலத்த இழுபறிக்குப் பிறகு 4,618 மனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டுள்ளன. அதே வேளையில் போதிய ஆவணங்கள் இல்லாமலும் குளறுபடிகள் காரணமாகவும் சுமார் 2,460 மனுக்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில் போட்டியில் இருந்து விலக விரும்பி 521 பேர் தங்களது மனுக்களைத் தாமாக முன்வந்து திரும்பப் பெற்றுள்ளனர். இந்த நிலவரப்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 85 வேட்பாளர்கள் களத்தில் நின்று மல்லுக்கட்டப் போவதால் அங்குப் போட்டி தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு நேர்மாறாகக் குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் வெறும் 5 வேட்பாளர்கள் மட்டுமே நேரடியாகப் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இந்த முக்கியத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தங்கள் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களும் அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்கள் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யத் தொகுதிப் பக்கம் தவம் கிடக்கத் தொடங்கிவிட்டனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் களம் தற்போது முழு வீச்சில் தயாராகிவிட்டதால் வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.