`சாபக்கேடு' என விமர்சித்த பாகிஸ்தான்; 'அழிவுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம்'- எச்சரிக்கும் இஸ்ரேல்!
Vikatan April 10, 2026 03:48 PM

``லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு" என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

இஸ்ரேல் குறித்துப் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா, "இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு.

பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்

இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, லெபனானில் இனப்படுகொலை செய்யப்படுகிறது.

அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும் ரத்த ஆறு ஓயாமல் தொடர்கிறது.

ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீனிய மண்ணில் புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்" என்று இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்பிறகு இஸ்ரேல் கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் இஸ்ரேல், "அமைதிக்காக மத்தியஸ்தம் செய்வதாக கூறும் ஒரு நாடு, யூதர்களின் அழிவுக்கு அழைப்பு விடுக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

யூத அரசை 'புற்றுநோய்' என்று அழைப்பது, அவர்களின் அழிவுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம்.

இஸ்ரேலை அழிப்பதாக சபதம் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்" என்று இஸ்ரேல் பதிலடி கொடுத்திருக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.