ஐபிஎல் – 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி
Dhinasari Tamil April 11, 2026 02:48 AM

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஒன்பதாவது ஆட்டம் ராஜஸ்தான் vs குஜராத் – அகமதாபாத் – ஏப்ரல் 4

          முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது. அந்த அணியின் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (36 பந்துகளில் 55 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்), வைபவ் சூர்ய வன்ஷி (18 பந்துகளில் 31 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), துருவ் ஜுரல் (42 பந்துகளில் 75 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) அதிரடியாக ஆடியதால் ராஜஸ்தான் அணி  210 ரன் எடுத்தது. பின்னர் இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் (44 பந்துகளில் 73 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்), ஜாஸ் பட்லர் (14 பந்துகளில் 26 ரன்), ரஷீத் கான் (16 பந்துகளில் 24 ரன்) மற்றும் ரபாடா (16 பந்துகளில் 23 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் தோல்வியுற்றது. ராஜஸ்தான் அணியின் ரவி பிஷ்னோய் 4 விக்கட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

பத்தாவது ஆட்டம் – ஹைதராபாத் vs லக்னோ – ஹைதராபாத் – ஏபரல் 5 – முதல் ஆட்டம்

          முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் நான்கு வீரர்களான ட்ராவிஸ் ஹெட் (7 ரன்), அபிஷேக் ஷர்மா (பூஜ்யம்), இஷான் கிஷன் (1 ரன்), லியம் லிவிங்க்ஸ்டோன் (14 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  அதன் பின்னர் ஆட வந்த ஹென்றி கிளாசன் (41 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (33 பந்துகளில் 56 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். அதனால் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்க இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. லக்னோ அணியின் முகம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான் மூவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். இரண்டாவதாக ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் எய்டன் மர்க்ரம் (27 பந்துகளில் 45 ரன்), ரிஷப் பந்த் (ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 68 ரன், 9 ஃபோர்) எடுத்தனர். ஆட்டநாயகனாக முகம்மது ஷமி அறிவிக்கப்பட்டார்.

பதினோராவது ஆட்டம் – பெங்களூரு vs சென்னை – பெங்களூரு – ஏபரல் 5 இரண்டாவது ஆட்டம்

          முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 250 ரன் எடுத்தது. இந்த ஐபிஎல்லின் அதிக பட்ச ஸ்கோர் இது. ஐபிஎல்லில் அதிக பட்ச ஸ்கோர் 2024ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி பெங்களூரு அணிக்கு எதிராக அடித்த 287/3 ஆகும். பெங்களூரு அணியின் டிம் டேவிட் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ரன், 3 ஃபோர், 8 சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். அவரைத்தவிர பில் சால்ட் (30 பந்துகளில் 46 ரன்), விராட் கோலி (18 பந்துகளில் 28 ரன்), தேவதத் படிக்கல் (29 பந்துகளில் 50 ரன்), ரஜத் படிதர் (19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர் கூட சரியாகப் பந்துவீசவில்லை.

          251 என்றா மிகப் பெரிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய சென்னை அணியின் சஞ்சு சாம்சன் (9 ரன்), கெய்க்வாட் (7 ரன்), ஆயுஷ் மாத்ரே (1 ரன்)  ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சர்ஃப்ராஸ் கான் (25 பந்துகளில் 50 ரன்), பிரஷாந்த் வீர் (29 பந்துகளில் 43 ரன்), ஜமி ஓவர்டன் (16 பந்துகளில் 37 ரன்) சிறப்பாக ஆடினர். இருப்பினும் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சென்னை அணி 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூரு அணியின் புவனேஷ் குமார் 3 விக்கட், டஃப்ஃபி, அபிநந்தன் சிங், க்ருணால் பாண்ட்யா தலா 2 விக்கட்டுகள் எடுத்தனர். டிம் டேவிட் ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.

பன்னிரண்டாவது ஆட்டம் – கொல்கொத்தா vs பஞ்சாப் – கொல்கொத்தா – ஏபரல் 6

          கொல்கொத்தாவில் ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழையால் தடைபட்டது. முதலில் ஆடிய கொல்கொத்தா அணி 3.4 ஓவர்கள் விளையாடி 2 விக்கட் இழப்பிற்கு 25 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இறுதியில் ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஐபிஎல் – 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.