மிகுந்த மனவேதனையுடன் ராஜினாமா; குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய நீதிபதி யஷ்வந்த் வர்மா..!
Seithipunal Tamil April 11, 2026 05:48 AM

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றபோது, வீட்டின் ஒரு அறையில் இருந்து எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர்.

இதை எதிர்த்து யஷ்வந்த் வர்மா மனுத் தாக்கல் செய்தார்.  நாடாளுமன்ற குழு விசாரணையைத் தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். அதில் மிகுந்த மனவேதனையுடன் பதவியை ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.