நடிகராக இருந்த அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். அவர் தோன்றிய தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 234 தொகுதிகளிலும் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்தார். ஒருபக்கம் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். விஜய் எந்த நேரத்தில் பிரச்சாரத்தை தொடங்கினாரோ தெரியவில்லை அவர் பிரச்சாரம் செய்ததை விட பிரச்சாரத்தை ரத்து செய்வதுதான் அதிகமாக இருக்கிறது.. முதல் நாளே கொளத்தூரில் அவரால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அதோடு வில்லிவாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் ரத்து செய்தார்..
அதன்பின் சென்னை தி.நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் அனுமதி கேட்டபோது போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனவே அதை ரத்து செய்தார். சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி இரண்டு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார். திருநெல்வேலி முடித்துவிட்டு தூத்துக்குடி சென்றபோது அங்கே நிறைய கூட்டம் இருந்ததால் அங்கும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை.
நேற்று சிவகங்கை மாவட்டம் சென்று சில ஊர்களில் பேசினார். சீமான் தொகுதியான காரைக்குடியில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனுமதி கொடுத்த நேரத்தை தாண்டி அந்த இடத்திற்கு வந்ததால் விஜய்க்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.. எனவே பிரச்சாரத்தை ரத்து செய்தார். ஏப்ரல் 11ம் தேதியன இன்று விஜய்க்கு கடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.. பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடலூர், மஞ்சக்குப்பம், வடலூர், விருத்தாச்சலம் புறவழிச்சாலை, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் விஜய்க்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது..
விஜய்க்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால் அதே பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்திருக்கிறார். ஏற்கனவே இந்த பகுதியில் கடந்த 9ம் தேதி விஜய் பிரச்சாரம் செய்ததாக அறிவிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக விஜய் கடலூரில் பிரச்சாரம் செய்ய ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நிர்வாக காரணங்களால் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தவெக தெரிவித்திருக்கிறது..
விஜய் இப்படி தொடர்ந்து தனது பிரச்சாரங்களை ரத்து செய்து கொண்டே போனால் அவரால் பாதி தொகுதிகளில் கூட பிரச்சாரத்தை முடிக்க முடியாது என பலரும் சொல்கிறார்கள்.