தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த், கட்சியின் கொடியை ஏற்றச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு தர்மசங்கடமான சூழல் உருவானது. கொடி கம்பத்தில் கயிறு சரியாகக் கட்டப்படாததால், அவர் எவ்வளவு முயன்றும் கொடியை மேலே ஏற்ற முடியாமல் திணறிய காட்சிகள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகின்றன. ஒருகட்டத்தில் கொடி எக்குத்தப்பாகச் சிக்கிக் கொண்டதால், மேடையிலேயே என்ன செய்வதென்று தெரியாமல் நிர்வாகிகள் அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போயினர்.
நிலைமை மோசமாவதைக் கண்ட மற்றொரு கட்சி நிர்வாகி, சற்றும் யோசிக்காமல் கம்பத்தின் மேலே ஏறிச் சென்று, சிக்கியிருந்த கயிற்றை லாவகமாக விடுவித்தார். அதன் பின்னரே கொடி கம்பீரமாக மேலே ஏறியது. மிக முக்கியமான நிகழ்வில் இப்படி ஒரு ‘சொதப்பல்’ நடந்ததை அங்கிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். “தலைவர் வர்றதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே” என நிர்வாகிகள் அப்செட் ஆனாலும், இந்தத் திக் திக் வீடியோ இப்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.