நடிகர் ஆர்யா (Arya) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய பிரபல நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் மிஸ்டர் எக்ஸ் (Mr. X). இப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லர் பாணியில் தயாராகியுள்ள இப்படம் வரும் 2026 ஏப்ரல் 17ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இப்படத்தில் நடிகர் ஆர்யா லீட் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு இணையான வேடத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் (Gautham Ram Karthik) இணைந்து நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மஞ்சு வாரியர், சரத்குமார், அனகா, ரைசா வில்சன் மற்றும் அதுல்யா ரவி என பெல்வரு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் நேற்று 2026 ஏப்ரல் 11ம் தேதியில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அதில் பேசிய ஆர்யா, மிஸ்டர் எக்ஸ் படம் வெளியானதும், கௌத்தம் ராம் கார்த்திக்கை அனைவரும் கொண்டாடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னை கம்பியால் அடித்தார்கள் – குக்வித் கோமாளி பிரபலங்கள் மீது புகார் கொடுத்த வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்!
அண்ட் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆர்யா பேசும்போது, “மிஸ்டர் எக்ஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால், கௌதம் கார்த்திக்கின் வேடத்தில் நடித்திருப்பேன். இப்படத்தில் நிறைய டைமென்ஷன் இருக்கும் கதாபாத்திரத்தில்தான் கௌதம் நடித்துள்ளார். மிகவும் கடினமான கதாபாத்திரம். நிச்சயமாக இந்த படம் பார்த்ததும் அனைவரும் கௌதம் கலக்கிட்டாருனு சொல்லுவாங்க. அந்த அளவிற்கு அவரின் திறமையாக காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் லீக் – தணிக்கை வாரியம் விளக்கம்
மேலும் இப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தை ஷூட் பண்ணபிறகு பார்க்கும்போது, அவரின் நடிப்பு அதை இயக்குநர் மனு எவ்வாறு கொண்டு சென்ருக்குகிறாரா என்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் கஷ்டமானது, ஆனால் அதற்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் குறித்து ஆர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:Just 7 days, and the spies will fire up the screens!#MrX in theatres from April 17 🎯
Tamil Trailer ▶️ https://t.co/MXd25UgfQE
Telugu Trailer ▶️ https://t.co/W4s0m41XzAA film by @itsmanuanand.
Produced by @vineetjaintimes @lakku76.
Co-produced by @venkatavmedia.#Maverik… pic.twitter.com/b008jD7vJH— Arya (@arya_offl)
இந்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படமானது முற்றிலும் ஆக்ஷன் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படமானது கிட்டத்தட்ட துரந்தர் படத்திற்கு இணையான தமிழ் படமாகவே தயாராகியுள்ளது என கூறலாம். இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வரும் 2026 ஏப்ரல் 17ம் தேதியில் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.