கடலூர் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திருமாவளவன் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது பிரேமலதா எழுந்து நிற்கவில்லை என்ற சமூக ஊடக விமர்சனங்களுக்கு அவர் மிகத்தெளிவான விளக்கம் அளித்துள்ளார். “விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும் எனக்கும், கேப்டனுக்குமான நட்பு இன்று நேற்றல்ல, பல ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது அதை நேரில் வந்து திறந்து வைத்தவர் கேப்டன்.
அதன் பிறகு மக்கள் நலக் கூட்டணியில் ஒரு சகோதரராகவே எங்களுடன் பழகியவர் திருமா. அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கும், சுதீஷ் வீட்டிற்கும் வருவார்; வந்தாரென்றால் எங்களுடன் அமர்ந்து சாப்பிடாமல் செல்லவே மாட்டார். அந்த அளவிற்கு எங்களுக்குள் ஒரு ஆழமான குடும்ப நட்பு இருக்கிறது. இது வெளியே இருந்து விமர்சனம் செய்பவர்களுக்குத் தெரியாது. கேஷுவலாக உட்கார்ந்திருப்பதை எல்லாம் தப்பு என்று சொல்வது அர்த்தமற்றது” எனத் தெரிவித்தார்.