தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார். அங்கு தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கன்னியாகுமரியில் பல பகுதிகளிலும் பைபாஸ் சாலையில் அவர் ரோட் ஷோ நடத்தினார். அப்போது சைக்கிளில் அவர் சில தூரங்கள் சென்று மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்..
அதுவும் பல இடங்களில் பிரச்சார வாகனத்தை நிறுத்தி அவர் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை அருகில் காண பல ரசிகர்களும் ஓடி வந்தார்கள்.. கூட்டம் அதிகமானதை தொடர்ந்து சைக்கிளை விட்டு விட்டு அவர் மீண்டும் பிரசார வாகனத்திற்கு சென்றார்.
விஜய் பைபாஸ் சாலையில் சைக்கிளை வேகமாக ஓட்டும் வீடியோவை சிலர் பகிர்ந்து ‘விஜய்க்கு தற்போது மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.. விஜய் தனியாக இவ்வளவு வேகமாக சைக்கிளை ஓட்டி செல்கிறார்.. எனவே, அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ் அதிகாரிகள் அவரின் பின்னால் ஓடி வருகிறார்கள்.. ஒரு கட்டத்தில் அவர்களாலும் ஓட முடியவில்லை.
விஜய் இப்படி செய்தால் அவருக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? அவருக்கு ஏதேனும் நடந்தால் யார் பொறுப்பு? விஜய் இப்படி செய்தது தவறு என’ கருத்து தெரிவித்து வருகிறார்கள்.