இணையத்தில் கசிந்த ஜனநாயகன்.. வீடு புகுந்து 6 பேரை தூக்கிய போலீஸ்… முழு விவரம் உள்ளே!
TV9 Tamil News April 12, 2026 11:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் விவகாரம் தொடர்பாக அந்த படம் வெளியாவதில் தற்போது வரை இழுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் திடீரென இணையத்தில் கசிந்தன. இதற்கு மறுநாள் முழு ஜனநாயகன் படமும் இணையத்தில் வெளியானது. இதனால், பட தயாரிப்பு குழு கடும் அதிர்ச்சி அடைந்தது. அப்போது, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் இணையத்தில் இருந்து ஜனநாயகன்படத்தை இணையத்தில் கசியவிட்டது. படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள், மற்றவர்களுக்கு அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக இணையவழி குற்ற தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வீடு புகுந்து 6 பேரை தட்டி தூக்கி போலீஸ்

மேலும், சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மர்மநபர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை இணையத்தில் கசிய விட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், அவர்கள் எங்கிருந்து படம் பிடித்தனர். எப்படி இணையத்தில் அப்லோட் செய்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதில், ஜனநாயகன் படத்தை சேர் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைதான நபர்கள் குறித்த தகவலை போலீசார் தற்போது வெளியிடவில்லை.

மேலும் படிக்க: வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள்.. விஜய் வெளியிட்ட பக்கா மாஸ் அறிவிப்புகள்.. முழு விவரம் இதோ!

சென்சார் போர்டு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம்

இதனிடையே, சென்சார் போர்டு மூலமாக இந்த படம் வெளியாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. இதற்கு சென்சார் போர்டு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில், இந்த விவகாரத்துக்கும், சென்சார் போர்டுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. பாஸ்வேர்டு மூலமாக இந்த படத்தை வைத்திருப்பதாகவும். இந்த பாஸ்வேர்டு இல்லாமல் எங்கள் தரப்பில் இருந்து இந்த படத்தை வெளியிட்டிருக்க முடியாது என்று தெரிவித்திருந்தது.

தவெக தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

மேலும், ஜனநாயகன் படம் லீக்கான விவகாரத்தில் 100- க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே மத்திய அமைச்சர் எல்.முருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மூலமாக இந்த படம் வெளியிடப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். மேலும், இந்த பட குழுவை சேர்ந்தவர்களிடம் இருந்தே படம் லீக் ஆகி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள்… அள்ளி வீசிய தவெக தலைவர் விஜய்.. என்னென்ன உள்ளன!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.