தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தலைகாட்ட தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை மைய தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடைகால விடுமுறைகள் முன்னதாகவே அறிவிக்கப்பட உள்ளன. அத்துடன், தேர்தலும் குறிக்கிடுவதால் விடுமுறைகள் எக்கச்சக்கமாக விடப்பட உள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளில் தஞ்சம் புகுந்து கிடப்பார்கள். அந்த வேளையில் சுற்றுலா செல்ல வேண்டும் என்று அனைவரது மனதிலும் தற்போது எண்ணம் எழ தொடங்கி இருக்கும். அவ்வாறு கோடை கால சுற்றுலா செல்வதற்கு பட்டியலையும் சிலர் தயார் செய்து வைத்திருப்பார்கள். அந்த பட்டியலில், பின்வரும் இந்த இடத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தளங்களில் இந்த சுற்றுலா தளமும் முக்கிய பங்கு வைக்கிறது என்பதால் தான்.
தென்னிந்தியாவின் சிரபுஞ்சிஅப்படி என்ன சுற்றுலா தளம் என்று உங்கள் மனம் எண்ணுகிறது வெளியில் தெரிகிறது. சரி… அது என்ன சுற்றுலா தளம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே அமைந்துள்ளது தென்னிந்தியாவின் சிரபுஞ்சி. ஆனைமலை மலைகளுக்கு மத்தியிலும், மூடுபனியுடன், செல்லும் அடர்ந்த மேகக் கூட்டங்களும் இந்த பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது இந்தப் பகுதி. சின்னகல்லார் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியானது தென்னிந்தியாவின் 3- ஆவது அதிக மழை பெய்யும் இடமாகவும் தமிழகத்தின் மிகவும் ஈரப்பதமான இடமாகவும் விளங்கி வருகிறது.
மேலும் படிக்க: த்ரில்லிங்கான பைக் ரைடு + படகு சவாரி = அல்டிமேட் காம்போ.. இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் முதல் இடத்தில்இதனால், இந்த பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 5000 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மெசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய இரண்டு இடங்கள் அதிக ஈரப்பதம் உடைய பகுதிகளாக விளங்கி வருகிறது. இதில், சின்னக்கல்லார் இந்தியாவின் 3- ஆவது இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் உள்ளது. இந்த பகுதியில் பிரபலமான நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியானது சுமார் 130 அடி நீளம் உடையதாகவும், கரடு முரடான பாதைகளுடன் அடர்ந்து புதர்கள் மண்டிய வழி பாதை ஆகும் உள்ளது. இந்த பகுதிகளை கடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
த்ரிங்குடன் இயற்கையை ரசிக்க ஏற்ற இடம்இருந்தாலும், இயற்கையை விரும்பும் இயற்கை வாசிகள் இந்த பகுதியில் நிறைந்திருக்கும் பசுமையான வாழ்விடத்தில் செழித்து வாழும் தாவரங்கள், திரில்லிங்கை அதிகப்படுத்தும் வனவிலங்குகள், கீச்சு கீச்சு சத்தமிடும் சுற்றும் பறவைகளுக்கு மத்தியில் இயற்கையை ரசிக்க ஏற்ற இடம் ஆகும். இந்த பகுதியில் தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மேகங்கள் தவழும் மலைச் சரிவுகள் ஆகியவை அமைந்துள்ளன. மேலும் மரங்களின் வேர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை பாலங்கள் ஒரு அடையாளச் சின்னமாக விளங்கி வருகிறது. இதே போல, மாஸ்மாய் போன்ற பழமையான சுண்ணாம்பு குகைகள் இந்த பகுதியில் உள்ளன. அப்புறம் என்ன ஒரு டூரை இங்க போடுங்க.
மேலும் படிக்க: தகிக்கும் வெயில்.. தணிக்கும் புல் குடில்கள்.. மகாபலிபுரத்தில் அசத்தல் ஏற்பாடு!