ஆடம்பரமான 7,351 அறைகளுடன் ஆசியாவில் உலகின் மிகப்பெரிய ஹோட்டல் எது தெரியுமா..?
Seithipunal Tamil April 13, 2026 03:48 AM

உலகில் ஆடம்பரத்துக்கு பெரிய போன பல நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. இதில், அறைகள் எண்ணிக்கையைப் பார்த்தால், ‘ஃபர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல் & பிளாசா’க்கு நிகர் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சாதாரணமான 03-நட்சத்திர வசதிகள் கொண்ட ஹோட்டல் மட்டுமே. இருப்பினும், தங்குமிடம் வசதியில் உலகின் மிகப் பெரிய ஹோட்டல் என்ற பெயரை இன்றும் தக்க வைத்துள்ளது.

2006-இல் மலேசியாவில் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில், 6118 அறைகள் இருந்தன. ஆனால், 02 ஆண்டுகளுக்குப் பிறகு லாஸ் வேகாஸில் ‘தி வெனிஷியன் ரிசார்ட்’ 7128 அறைகளுடன் திறக்கப்பட்டதால், இது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் 2015-இல் ‘ஃபர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல் & பிளாசா’ இரண்டாவது கோபுரத்தை கட்டி, மீண்டும் உலகின் மிகப் பெரிய ஹோட்டல் என்ற பட்டத்தைப் பெற்றது. இதில் சுமார் 7,351 அறைகளுடன் இன்றும் முதலிடத்தில் உள்ளது.

ஜென்டிங் குழுமம் கட்டிய இந்த ஹோட்டல், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் பஹாங் பகுதியில், ஜென்டிங் ஹைலேண்ட்ஸில் அமைந்துள்ளது. இது பகுதி தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய பொழுதுபோக்கு மையமாகும். ஆண்டுதோறும் சுமார் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று வருகின்றனர். எப்போதும் இந்த ஹோட்டல் நிரம்பியே இருக்கும். கொரோனா முன்பாக இதன் சராசரி தங்கும் விகிதம் சுமார் 90% ஆக இருந்த நிலையில், இன்றும் பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டே உள்ளன.

இந்த ஹோட்டல் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக முதலில் பார்க்கப்படுவது, இது ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஜென்டிங்கின் மையப் பகுதியில் அமைந்துள்ளதாகும். அத்துடன், தீம் பார்க், ஃபுட் கோர்ட், ஷாப்பிங் சென்டர் ஆகியவைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மலேசியாவில் உள்ள ஒரே கேசினோ பகுதியும் இதற்கு அருகிலேயே இருப்பது இதை இன்னும் சிறப்பு. 

இந்த  ஃபர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டலின் மற்றொரு சிறப்பு அதன் குறைந்த மற்றும் நியாயமான விலை, எளிய செக்-இன் முறை. அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்களை சுலபமாக கையாளும் வசதி உள்ளது. இங்கு பணக்காரர்கள் மட்டுமல்ல, சாமானிய மக்களும் சென்று தங்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

அறைகள் வகையைப் பார்த்தால், இந்த ஹோட்டலில் 3164 ஸ்டாண்டர்டு அறைகள், 2922 லக்சுரி (ஆடம்பரமான) அறைகள், 649 லக்சுரி டிரிபிள் அறைகள், 480 சுப்பீரியர் லக்சுரி அறைகள், 136 வேர்ல்ட் கிளாஸ் அறைகள் உள்ளன. வெறும் பெரிய அளவுக்காக மட்டுமல்ல, புத்திசாலித்தனமான திட்டமிடல் மற்றும் வசதிகளால் உலகளவில் தனித்துவமான இடத்தை இந்த ஹோட்டல் பெற்றுள்ளமை இந்த ஹோட்டலின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.