||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 13श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பங்குனி ~ 30 ( 13.4.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 10.27 pm வரை ஏகாதசி பின் துவாதசி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 1.25 pm வரை அவிட்டம் பின் சதயம்
யோகம் ~ சுபம்
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.08
சந்திராஷ்டமம் ~ கடகம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ ஏகாதசி
இன்று ~ சர்வ ஏகாதசி
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (13-4-2026) ராசி பலன்கள்
மேஷம்மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மேன்மை பெருகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அஸ்வினி : முன்னேற்றம் ஏற்படும்.
பரணி : துரிதம் மேம்படும்.
கிருத்திகை : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெருமை சேரும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : வசதிகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கைமாற்றாக கொடுத்து இருந்த பணங்கள் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். விற்பனை பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : போட்டிகள் அதிகரிக்கும்.
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
புனர்பூசம் : குழப்பங்கள் மறையும்.
பூசம் : ஆர்வமின்மையான நாள்.
ஆயில்யம் : பேச்சுக்களில் கவனம்.
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மகம் : பிரச்சனைகள் குறையும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
வியாபார விஷயங்களில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபங்களும் அனுபவமும் கிடைக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பாராட்டு குவியும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூர்வீக சொத்துக்களில் சில மாற்றம் செய்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபார ரீதியான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். பிரீதி மலரும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பணி இடங்களில் மாறுதல் ஏற்படும். பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
கேட்டை : ஆர்வம் உண்டாகும்.
பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி வெல்லும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : தீர்வுகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : நெருக்கடிகள் விலகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயங்களில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சாதனை புரியும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
சதயம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
வியாபார பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். ஆக்கம் தரும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரட்டாதி : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
ரேவதி : புதுமையான நாள்.
தினம் ஒரு திருக்குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)
– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.
மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.
தினம் ஒரு திருமுறைமறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
இன்றைய சிந்தனைக்கு…காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!
நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!
தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!
பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil