CBSE Class 10th Result 2026: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மாணவர்கள் செய்ய வேணிடியது என்னவென்று கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பல்வேறு தகவல்களில், இன்று (ஏப்.14) தேர்வு முடிவுகள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாக்வில்லை. அதேநேரம், டிஜிலாக்கர் தளமானது சிபிஎஸ்இ 10ன் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பான பதிவில், “தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்திருக்காதீர்கள். டிஜிலாக்கர் கணக்கை இன்றே தொடங்குங்கள் பின்பு முடிவுக்காக காத்திருங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, APAAR கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக அதனை தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்ட அந்த கணக்கை கொண்டிருக்கும் மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளியானதுமே வெளியிடப்பட்ட ஆவணங்கள் பிரிவில் தங்களது மதிப்பெண் பட்டியலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
APAAR என்றால் ஆட்டோமேடட் பெர்மனெண்ட் அகாடெமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்ட்ரி என்பதன் சுருக்கமாகும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும் ”ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை” எனும் முன்முயற்சியின் கீழ் தொடங்கப்பட்ட தனித்துவமான 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டையாகும். இது மழலையர் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலான ஒருவரது அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் பெற உதவும் ஒரு டிஜிட்டல் லாக்கராகும். இந்த கணக்கை தொடங்குவதற்கான வழிமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
Don’t wait till result day-set up your DigiLocker account now and stay ready.
— DigiLocker (@digilocker_ind) April 13, 2026
🔗https://t.co/pSvg3mGnPS
📌 Note:
Students without an APAAR ID need to create their account.
Students with an APAAR ID linked to CBSE will receive their mark sheets in DigiLocker’s Issued Documents… pic.twitter.com/f42lxNlGVF
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், டிஜிலாக்கரிலிருந்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.