ஒரே நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தால் ஓய்வூதியமும் மரியாதையும் கிடைக்கும் என்ற காலம் இப்போது மலையேறிவிட்டது” எனத் தொழில்முறை வல்லுநர் ஒருவர் லிங்க்டுஇன் தளத்தில் பதிவிட்டது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இன்றைய சூழலில் ஒரு வேலையின் சராசரி பணிக்காலம் வெறும் 2 முதல் 3 ஆண்டுகள் தான் என்றும், அதற்கு மேல் எந்த நிறுவனமும் ஒரு ஊழியரின் தியாகத்தை நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால உழைப்பு என்பது பழைய தலைமுறைக்கானது என்றும், தற்போதைய ஜென்-இசட் தலைமுறைக்கு அது பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளது இணையவாசிகள் இடையே காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“>
ஒரு ஊழியர் நிறுவனத்திற்காகத் தன்னை வருத்திக்கொண்டு உழைக்கும் கலாசாரம் இனி எடுபடாது என்கிற ரீதியில் அவரது கருத்து அமைந்துள்ளதால், கார்ப்பரேட் உலகில் இது ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.