விஜயின் ரோடு ஷோவால் அதிர்ந்த அவிநாசி
Top Tamil News April 14, 2026 11:48 PM

கட்டுக்கடங்காத கூட்டம் புடை சூழ அவிநாசியில் ரோடு ஷோவை முடித்து பெருமாநல்லூர் பரப்புரை சென்றார் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பெருமாநல்லூரில் பரப்புரை மேற்கொண்டும் அவிநாசி பகுதியில் ரோட் சோவை நடத்தியும் தமிழக வெற்றி கழகத்திற்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக அவிநாசிக்கு கொச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அவிநாசி சந்திப்பிற்குள் நுழைந்து சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு சாலையின் இருபுறமும் பேரிகாடுகள் அமைத்து ரசிகர்கள் இருபுறமும் விஜயை காண்பதற்காக போலீசார் அனுமதிக்கப்பட்டனர். சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



   
தவெக தலைவர் விஜய்க்கு ரோடு ஷோவுக்கு 3 மணிக்கு தொடங்க அனுமதி கொடுத்திருந்த நிலையில், காலை 10 மணி முதல் வரத் தொடங்கிய கூட்டம் சுமார் மாலை 3.40க்கு விஜய் அவிநாசி சந்திப்பில் வந்து அவிநாசி புதிய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் யு டர்ன் எடுத்து மீண்டும் திருப்பூர் ரோட்டில் பெருமாநல்லூர் செல்லும் கொச்சின் சேலம் தேசிய நெடுஞ்சாலையை அடைந்தார். அப்போது சொகுசு வேனில் மேலே ஏறி நின்றபடி ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் விசில் ஊதியபடியே, கையசைத்தும் அவர்கள் கொடுத்த மாலைகளை கழுத்தில் அணிந்தும் ரசிகர்களின் தொண்டர்களின் உற்சாக வரவேற்பை விஜய் பெற்றுக் கொண்டார். விஜய் அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரும் வரை கட்டுக்குள் இருந்த ரசிகர்கள் கூட்டம் விஜயின் வாகனம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்ததும் அனைவரும் பேரிகாடுகளைத் தாண்டி ஏறி குதித்தும் ஒரு கட்டத்தில் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு பேரிகாடை உடைத்தும் ஓடிச் சென்று விஜயை பார்த்தனர். அதே போல பைபாஸ் சாலை சந்திப்பில் போலீசாரின் தடுப்புகளை தள்ளி விட்டு கூட்டம் முண்டியடித்துச் சென்றது. போலீசார் தடுத்தும் பயனின்றி முண்டியடித்ததால் சில பெண்கள் கீழே விழுந்து எழுந்து சென்றனர். இதனால் அந்த இடத்திலும் ரணகளமாக காட்சியளித்தது. இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சுமார் 5 மணி நேரம் உச்சி வெயிலில் காத்துக் கொண்டு விஜயை பார்த்த பின்பு கலைந்தனர். அவிநாசி பகுதிக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.