அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
TV9 Tamil News April 14, 2026 11:48 PM

கன்னட சினிமாவில் வெளியாகி உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு கேங்ஸ்டர் படம் தான் கேஜிஎஃப். இந்தப் படம் கன்னட சினிமாவை உலக அளவில் அறிமுகம் செய்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக கேஜிஎஃப் சாப்டர் 2 படம் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை இயக்குநர் பிரசாந்த் நீல் எழுதி இயக்கி இருந்தார். மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இந்தப் படத்தினை தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அன்மோல் விஜய், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்யுத் குமார், பிரகாஷ் ராஜ், வசிஷ்ட என். சிம்ஹா, ராவ் ரமேஷ், மாளவிகா அவினாஷ், டி.எஸ். நாகாபரணா, ஈஸ்வரி ராவ், அர்ச்சனா ஜோயிஸ், பி.எஸ். அவினாஷ், சரண் சக்தி, லக்கி லக்ஷ்மன், ஐயப்ப பி.சர்மா, அனந்த் நாக், அசோக் சர்மா, ஜான் கொக்கன், கோவிந்த கவுடா, ஹரிஷ் ராய், தாரக் பொன்னப்பா, தினேஷ் மங்களூரு, பாலகிருஷ்ணா, அப்பாஜி அம்பரீஷா தர்பா, ரமேஷ் இந்திரா, ராமச்சந்திர ராஜு, வினய் பிடப்பா, பி. சுரேஷ், மோகன் ஜுனேஜா, ரூபா ராயப்பா, கிருஷ்ணப்பா, ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, கிருஷ்ணோஜி ராவ், யாஷ் ஷெட்டி, திவ்யா ஜி கவுடா என பலர் நடித்து இருந்தனர்.

4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்:

பீரியட் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் யாஷ் ராக்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். இவர் சிறுவயதிலேயே தனது தாயை இழந்து தனியாக வளர்ந்து இருப்பார். இறப்பதற்கு முன்பு தனது தாய் சொன்ன ஒற்ற வார்த்தை ஏழையாக பொறந்துட்டா ஆனா ஏழையாக சாகக்கூடாது என்பதை மனதில் ஆழமாக வைத்துக்கொண்டு பணத்திற்காக கடினமாக உழைக்கிறார். உழைத்தால் மட்டும் பெரிய ஆளாக முடியாது என்பதை உணர்ந்த ராக்கி அதிகாரத்தையும் பொருளையும் தேடி தேடி தன்வசமாக்கிக்கொள்கிறார். இந்தப் படத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழு அதனை கொண்டாடி வருகின்றனர்.

Also Read… Karuppu: சூர்யாவின் கருப்பு படத்தின் 3வது சிங்கிள்.. ‘ராத்து ராசன்’ பாடல் புரோமோ வீடியோ வெளியீடு!

கேஜிஎஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Celebrating 4 Glorious Years of #KGFChapter2 🔥💥#4YearsForKGF2Mania@TheNameIsYash #PrashanthNeel @VKiragandur @ChaluveG @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @RaviBasrur @bhuvangowda84 @shivakumarart @KGFTheFilm @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC… pic.twitter.com/1dBi8Wf3Ak

— Hombale Films (@hombalefilms)

Also Read… Krithi Shetty: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்க கிரித்தி ஷெட்டி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.