விஜய்க்கு மட்டுமா..! எனக்கும் அப்படித்தான் நடந்துச்சு … ஜக்குபாய் பட ரகசியம் முதல் திமுக ஆட்சி வரை! ஓபனாகப் போட்டு உடைத்த சரத்குமார்..!!!
SeithiSolai Tamil April 15, 2026 12:48 PM

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் சரத்குமார், தமிழக வெற்றி கழகம் குறித்தும் திமுக ஆட்சி குறித்தும் பரபரப்பான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசியலில் விஜய் தொடங்கியுள்ள தவெக எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” எனக் குறிப்பிட்டதோடு, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“>

 

மேலும், திமுக ஆட்சியின் அவலங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தனது ‘ஜக்குபாய்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த மர்மங்களுக்குப் பின்னால் இருந்த சில அரசியல் பின்னணிகள் குறித்தும், அது தனது திரையுலகப் பயணத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் விரிவாகப் பேசிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.