அப்பாவைக் கொன்றது இதுதான்.. ஷேன் வார்னே மரணத்திற்கு 'தடுப்பூசி' தான் காரணமா? 4 வருஷம் கழிச்சு மகன் உடைத்த பகீர் உண்மை..!!
SeithiSolai Tamil April 15, 2026 12:48 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் ஜாக்சன் வார்னே ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு போட்காஸ்ட் நேர்காணலில் பேசிய ஜாக்சன், தனது தந்தை விருப்பம் இல்லாமலேயே தனது வேலை நிமித்தமாக மூன்று அல்லது நான்கு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு தாய்லாந்தில் தங்கியிருந்தபோது, 52 வயதான ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார். அவர் ஏற்கனவே புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் கொண்டிருந்தாலும், உடல் ரீதியாக ஆரோக்கியமாகவே தெரிந்ததாக ஜாக்சன் கூறியுள்ளார்.

மரணத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பு வார்னே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசியே அவரது உடல்நிலையை மோசமாக்கியிருக்கலாம் என்று ஜாக்சன் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்தத் தகவல் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.