தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம்.
தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வர நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.
தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜய் இன்று சென்னையில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். தியாகராய நகர் மற்றும் மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
“தமிழ்நாட்டு மக்களின் மனநிலை அதிமுகவுக்கு நன்றாக தெரியும். கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை 1980ம் ஆண்டே மக்கள் புறக்கணித்து உள்ளனர்” கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்.
தமிழ்நாடு பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடக்கம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை 14 ஆயிரத்து 320 ரூபாயாக நிர்ணயம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று சாலை வலம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வருகிறார் பிரதமர். இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சாலை வலம் மேற்கொள்ளும் மோடி மீண்டும் டெல்லி செல்கிறார்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மீதான தங்களது நிலைப்பாடு குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் கார்கே இல்லத்தில் இன்று மாலை இக்கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும், தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்று சேர்ந்த எதிர்க்க வேண்டும் என தென் மாநிலங்களின் முதலமைச்சருக்கு தெலங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் “ அரசியல் உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி, டெல்லியில் நமது குரலை பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த இரு நாட்களில் பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல். இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்; பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்களூரு-லக்னோ அணிகள் மோதல்.