“தளபதி செஞ்ச அந்த ஒரு விஷயம்….” நெகிழ்ந்து போன தொண்டர்…. வைரலாகும் சென்னை தேர்தல் பரப்புரை வீடியோ….!!
SeithiSolai Tamil April 16, 2026 08:48 AM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், சென்னையில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது நடந்த சுவாரசியமான நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. பரப்புரையின் போது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விஜய்யிடம், அங்கிருந்த தொண்டர் ஒருவர் அன்புடன் இளநீர் ஒன்றை வழங்கினார். அந்த அன்பை மறுக்காமல், விஜய் அந்த இளநீரை வாங்கி அவர் கண் முன்பே குடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொண்டரின் சிறு வேண்டுகோளை ஏற்று விஜய் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளி எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி, விஜய் ரசிகர்களாலும் பொதுமக்களாலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ரீச் பெற்று வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.