தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், போகிற இடங்களில் எல்லாம் விஜய்க்கு அதிகளவில் கூட்டம் கூடுகிறது.
பணம் கொடுத்தும் பெரிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு ஆட்கள் திரளாத நிலையில், பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் வராதீங்க... வீட்டிலிருந்தே பாருங்க என்று அறிவுறுத்தியும் அதிகளவில் மக்கள் விஜய்யைப் பார்க்க கூடுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சென்னை தி.நகரிலும், எழும்பூரிலும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த், கட்சியின் வெற்றி மற்றும் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசுகையில், "தமிழகம் முழுவதும் தவெக-விற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தொகுதி வாரியாக நாங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகளில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பது உறுதியாகியுள்ளது."
"யார் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும், அடுத்த மாதம் தமிழகத்தின் முதலமைச்சராகத் தளபதி விஜய் ஆட்சியில் அமருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. யார் எங்களைத் தடுத்தாலும் அல்லது விமர்சித்தாலும், எங்கள் பணி மக்களுக்குச் சேவை செய்வது மட்டுமே. அந்த ஒற்றை இலக்கை நோக்கித் தளபதி தலைமையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்."

தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் வெற்றி குறித்து புஸ்ஸி ஆனந்த் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருப்பது தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.