யுரேனியத்தை கொடு.. இல்லையேல் மோதலை சந்தி.. ஈரானுக்கு அமெரிக்கா வைத்த 'செக்'.. இடையில் புகுந்து புதின் கொடுத்த மாஸ்டர் பிளான்.. உலகையே அதிரவைக்கும் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை..!!
SeithiSolai Tamil April 16, 2026 11:48 AM

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும், ஹார்முஸ் நீர்ச்சந்தியை சர்வதேசப் பாதையாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கான ஆதரவை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கடுமையான நிபந்தனைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானைப் பொறுத்தவரை, போரைத் தவிர்க்க விரும்பினாலும் தங்களின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. குறிப்பாக, 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, ஈரான் தனது யுரேனியத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக மின்சாரத் தேவைக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய யோசனையை ரஷ்ய அதிபர் புதின் முன்வைத்துள்ளார்.

தனது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரானும் பதில் நிபந்தனைகளை விதித்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.