“இது என்ன புது கொடுமையா இருக்கு?” – மனைவியை வாடகைக்கு எடுக்கும் சுற்றுலா பயணிகள்…. அதிரவைக்கும் ஏஐ (AI) ரிப்போர்ட்….!!
SeithiSolai Tamil April 16, 2026 01:48 PM

உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் தாய்லாந்தில், தற்போது ‘வாடகை மனைவி’ (Rental Wife) என்னும் கலாச்சாரம் மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகத் தனியாகச் சுற்றுலா வரும் பயணிகளைக் கவரும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் தங்களுக்குப் பிடித்தமான பெண்களைத் தற்காலிகமாக மனைவியாக அமர்த்திக் கொள்ளும் வசதி அங்கு அதிகரித்துள்ளது. இதற்காகச் சட்டப்பூர்வமான திருமணங்கள் எதுவும் நடைபெறாது என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இருவரும் தம்பதிகளாக வாழும் வகையில் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படுகின்றன.

தாய்லாந்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் இரவு நேரக் கொண்டாட்டங்களுக்குப் பெயர் பெற்ற பட்டாயா போன்ற நகரங்களில் இந்த நடைமுறை ஒரு பெரிய வணிகமாகவே உருவெடுத்துள்ளது. ஒரு அறிக்கையின்படி, இதற்குச் சுமார் 1,600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய்க்கும் மேல்) வரை செலவாகக்கூடும் என்று கூறப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சிக்காக இத்தகைய விசித்திரமான கலாச்சாரங்கள் ஊக்குவிக்கப்பட்டாலும், இது சமூக ஆர்வலர்களிடையே பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கி வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.