நான் செய்த பெரிய தவறாக முத்துராமலிங்கம் படத்தை பார்க்கிறேன் – கௌதம் ராம் கார்த்திக்
TV9 Tamil News April 16, 2026 03:48 PM

தமிழ் சினிமாவில்  கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் முத்துராமலிங்கம். தமிழ் சினிமவில் சாதியை மையமாக வைத்தும், சாதி பெருமை பேசுவது போன்ற படங்களும் அதிக அளவில் உருவாகி உள்ளது. அந்த வரிசையில் வெளியானதுதான் இந்த முத்துராமலிங்கம். இந்தப் படத்தை இயக்குநர் ராஜதுரைராஜ் எழுதி இயக்கி இருந்தார். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த முத்துராமலிங்கம் படத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பிரியா ஆனந்த், நெப்போலியன், சுமன், ரேகா, விவேக், சின்னி ஜெயந்த், விஜி சந்திரசேகர், FEFSI விஜயன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, சிங்கமுத்து, செல் முருகன், போண்டா மணி, சுப்பலட்சுமி ரங்கன், பாய்ஸ் ராஜன், அழகு, நெல்லை சிவா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான குளோபல் மீடியா வொர்க்ஸ் சார்பாக தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படம் குறித்தும் இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் செய்த பெரிய தவறாக முத்துராமலிங்கம் படத்தை பார்க்கிறேன்:

முத்துராமலிங்கம் கதைக்காக நான் உண்மையாகவே வருந்துகிறேன். அது என் தரப்பில் ஒரு மிகப்பெரிய தவறு. அது அறிவும் புரிதலும் இல்லாததிலிருந்து வந்தது. அந்தத் திட்டம் என் வாழ்விலும் திரைப்பயணத்திலும் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது.

அதன்பிறகு, நான் அந்த வகை திரைப்படங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டேன். ஒரு கட்டத்தில், இந்த முறை இன்னும் திறமையானவர்களின் கைகளில் அதை மீண்டும் முயற்சிக்க முடிவு செய்தேன். அதனால், முத்தையா சாருடன் ‘தேவராட்டம்’ செய்தேன். அவரால் பி மற்றும் சி சென்டர்களில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. ஆனால் இப்போதும் கூட, மாஸ் படங்களில் நடிப்பதற்கான பயம் எனக்குள் இருக்கிறது என்றும் கௌதம் ராம் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மணல் மாஃபியாவை எதிர்க்கும் விவசாயி… வெளியானது லெனின் பாண்டியன் படத்தின் ட்ரெய்லர்

இணையத்தில் வைரலாகும் கௌதம் ராம் கார்த்திக் பேச்சு:

#GauthamRamKarthik in a Recent Interview:

• Muthuramalingam is a story that I genuinely regret… it was a huge mistake on my part. It came from a lack of knowledge and understanding. That project remains one of the biggest failures of my life and career..

• After that, I… pic.twitter.com/2jKjCLkgJX

— Laxmi Kanth (@iammoviebuff007)

Also Read… மகராசி சீரியல் நடிகை வீட்டில் விசேசம்… வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.