விஜய் கேட்ட அந்த கேள்வியை சாகும் வரை மறக்க மாட்டேன் – ராதாரவி ஓபன் டாக்
CineReporters Tamil April 16, 2026 05:48 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார். வெகுவாக அமைதியாகவே காணப்படும் விஜய் வெகு சிலரிடமே நெருக்கமாக பழகுவார் என்று கூறப்படுவது உண்டு.

இந்த நிலையில் ராதாரவி ஒருமுறை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாக பரவுகிறது. ராதாரவி கூறுகையில் ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் என்னை தனியாக அழைத்துச் சென்றார். தப்பா நினைக்காதீங்க அண்ணா… உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று தயங்கியபடியே கேட்டார். நானும் பரவாயில்லை தம்பி, கேளுங்க என்றேன்.

அப்போது அவர், எம்.ஜி.ஆர் மீது நடந்த அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, உங்களது மனநிலை எப்படி இருந்தது? அந்தப் பதற்றமான சூழ்நிலையை உங்கள் குடும்பம் எப்படிச் சமாளித்தது? என்று கேட்டார். அவர் கேட்ட அந்தக் கேள்வியை நான் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். ஏனென்றால், பலரும் என்னிடம் வந்து, உங்க அப்பா ஏன் இப்படி பண்ணாரு? என்றுதான் கேட்பார்கள். ஆனால், விஜய் மட்டும் அந்தச் சம்பவத்தின் மறுபக்கம் இருந்த எங்கள் குடும்பத்தின் வலி குறித்தும், ஒரு மனிதநேய அடிப்படையிலும் என்னிடம் விசாரித்தார். அதுதான் விஜய் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் ராதாரவி தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.