தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) முதல் 45 நாள்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பொது மக்களின் குழந்தைகள் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் படையெடுப்பார்கள். இதேபோல, கோடை விடுமுறையை களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பார்கள். அவர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சுமார் 835 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் கூறியதாவது: தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து 310 சிறப்பு பேருந்துகள்இதையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) 295 சிறப்பு பேருந்துகளும், மறுநாள் சனிக்கிழமை ( ஏப்ரல் 18) 310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதே போல, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெங்களூர், ஓசூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17) 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: “காங்கிரஸை பற்றி பேச வேண்டாம்”.. நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு சங்கடம்.. சீமானுக்கு எச்சரிக்கை!!
திருப்பூர், பெங்களூரில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள்இதே போல, நாளை மறுநாள் சனிக்கிழமை ( ஏப்ரல் 18) 55 அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல, திருப்பூர், பெங்களூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை வெள்ளிக்கிழமை ( ஏப்ரல் 17 ) மற்றும் ஏப்ரல் 18- ஆம் தேதிகளில் 20 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் இயக்கப்படும் கோடை கால பேருந்துகள்இதே போல, சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை கால சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும். இதே போல, நிகழாண்டும் கோடை விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..