மத வன்முறையைத் தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்காமல் (Remand), வருத்தம் தெரிவிக்க வைத்து ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான நடைமுறை தற்போது சட்ட வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை ரிமாண்ட் செய்ய அழைத்து வந்தபோது, புகாரளித்தவரை மாஜிஸ்திரேட் ஏன் நீதிமன்றத்திற்கு வரவழைத்தார் என்ற காரசாரமான கேள்வியை எழுப்பினார். இது தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.