Siragadikka Aasai: அது சரி அடுத்து சத்யா கல்யாணமா? என்ன செய்ய போகிறார் மீனா?
CineReporters Tamil April 16, 2026 05:48 PM

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

ஏற்கனவே மீனாவுக்கும், சீதாவுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் அடுத்து சத்யா கல்யாண டிராக்கை கொண்டு வருவார்கள் என பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் தான் சத்யாவுக்கும், சிந்தாமணி மகள் ரேகாவுக்கும் காதல் தொடங்கியது. 

ஒரு கட்டத்தில் இந்த ரகசியம் உடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிந்தாமணி தான் தன்னுடைய அம்மா என்பதை ரேகா சத்யாவிடம் சொல்லிவிட்டார். இதனால் பயந்த சத்யா இந்த காதல் சரி வராது. உங்க அம்மாவால் தான் எல்லா பிரச்சனையும். 

அக்காவை ஆள் வைத்து கொலை செய்ய பார்த்தாங்க உங்க அம்மா. இதெல்லாம் வேண்டாம் என்கிறார். ஆனால் ரேகா நாம் பேசுவதை விட உங்க அக்கா, மாமாவிடம் இது பற்றி பேசலாம் எனக் கூறி அவரை அழைத்து செல்கிறார். 

அப்போது இருவரையும் ஒன்றாக பார்க்கும் சிந்தாமணி சந்தேகத்துடன் அவரை ஃபாலோ செய்து செல்கிறார். இந்த நேரத்தில் அமெரிக்க புது பொண்ணுடன் டேட்டிங் செல்ல மனோஜ் தயாராகி அதற்கான வேலைகளை பார்த்து கொண்டு இருக்கிறார். 

மறுபக்கம் வீட்டில் மீனாவிடம் பிரச்சனையை பேச பூ கடை ஆட்கள் வர அவர்களை அசிங்கப்படுத்தி பேசுகிறார் விஜயா. அப்போ மீனா வந்து அவர்களை அழைத்து உட்கார வைத்து விஷயத்தை கேட்க அவர்கள் சிந்தாமணி மிரட்டுவதால் தங்களால் கடை போட முடியவில்லை எனக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்போ விஜயா வந்து வீட்டு வேலையை யார் செய்வார் எனக் கேட்க முத்து தான் செய்வதாக சொல்கிறார். பின்னர் காபி வேணும், ரூம் க்ளீன் செய்ய வேண்டும் என முத்து விஜயா வெறுப்பேற்றி பார்க்கிறார். அங்கிருந்த பெண்கள், இப்படி ஒரு புருஷன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கணும் என பாராட்டிவிட்டு செல்கின்றனர்.

மனோஜ் டேட்டிங், சத்யா காதல் விவகாரம் உடைந்தால் சிந்தாமணி பிரச்சனை செய்ய இருப்பார் என்பதால் அடுத்தடுத்த எபிசோட் பரபரக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.