இந்திய மக்களின் LPG கேஸ் தேவையில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகவே பெறப்பட்டு வருகிறது. ஆனால் ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டிருப்பதால் இறக்குமதியின் அளவு 55 சதவீதமாக குறைந்துவிட்டது.
இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த பல நாட்களாகவே சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வணிக சிலிண்டர் கிடைக்காததால் பல ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. எனவே மாற்று வழிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது..
கச்சா எண்னெய், கேஸ் சிலிண்டர் இறக்குமதிக்கு ஒரே நாட்டை நம்பியிருக்காமல் மற்ற நாடுகளில் இருந்தும் பெறுவது, மற்ற நாடுகளின் கடல் வழித்தடங்களை பயன்படுத்துவது, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது போன்ற மாற்று வழிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது..
அதேநேரம் தற்போதுள்ள சூழ்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் சரியாக 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்..