தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கும் நிலை உருவாகுமா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வானதி, ‘மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் என்ன நிலை எடுக்குமோ, அதே நிலையை தான் அதிமுகவின் கூட்டணி கட்சிகளும் எடுக்கும்’ என்றார்.
கோவை தெற்கு தொகுதியிலிருந்து இந்த முறை கோவை வடக்கு தொகுதிக்கு தான் மாறியது குறித்த கேள்விக்கு, தொகுதி மாற்றம் என்பது கட்சி தலைமை எடுக்கும் முடிவு என்றும், தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு பணியாற்றுவதே ஒரு தொண்டரின் கடமை என்றும் விளக்கமளித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் வரவு பாஜகவின் வாக்கு வங்கியை பாதிக்குமா என்ற கேள்விக்கு, அவர் இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்காததால், அவரது செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கி குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் கணிக்க முடியும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Edited by Siva