கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி; உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்..!
Seithipunal Tamil April 16, 2026 08:48 AM

நடப்பு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி பட்டம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற இந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில், புதன்கிழமை அன்று இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி வீழ்த்தினார். இதன் மூலம் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இறுதி சுற்றுக்கு முன்னதாக கஜகஸ்தான் வீராங்கனை பிபிசாராவுடன் 7.5 புள்ளிகள் பெற்று சமநிலை செய்தார் வைஷாலி. இதில் திவ்யா உடனான ஆட்டத்தை பிபிசாரா சமனில் முடித்தார். வைஷாலி தனது இறுதி சுற்று ஆட்டத்தில் லாக்னோவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.