மிஸ்டர் எக்ஸ் படம்: தமிழ் சினிமாவில் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் தான் மிஸ்டர் எக்ஸ். இயக்குநர் மனு ஆனந்த் எழுதி இயக்கி உள்ள ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் இந்த மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அனகா, ரைசா வில்சன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் இருந்து ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் மிஸ்டர் எக்ஸ் படம் நாளை 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புரவியாட்டம் படம்: தமிழ் சினிமாவில் இயக்குநர் விநாயக சுப்ரமணியம் எழுதி இயக்கி உள்ள படம் புரவியாட்டம். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜு நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன் அத்வானி, அத்விக் ஜலந்தர், ஆர்.சுந்தரராஜன், நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, சாய் தினேஷ் பத்ரம், சுந்தர மகாலிங்கம், கஞ்சா கருப்பு என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட் பாய் கார்த்திக்: தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள இந்த பேட் பாய் கார்த்திக் படத்தை இயக்குநர் ரமேஷ் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் நாகசௌர்யா நாயகனாக நடிக்க நடிகை விதி யாதவ் நாயகியகா நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரக்கனி, நரேஷ், சாய்குமார், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்தது வேதனையாகவும் பயமாகவும் இருந்தது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
பள்ளிச்சட்டம்பி: மலையாள சினிமாவில் உருவாகியுள்ள ஆக்ஷன் ட்ராமா படம் தான் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படத்தை இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை கயடு லோஹர் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மலையாள சினிமாவில் உருவாகி உள்ள இந்தப் படம் நேற்று 15-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு விஷு பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… RJ Balaji: ஒரு மாஸ் ஹீரோவின் கதை.. கருப்பு படம் இப்படிதான் இருக்கும் – ஆ.ஜே.பாலாஜி!