நடிகர் நடராஜன் (நட்டி) நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவான TN 2026 திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பலரை மறைமுகமாக கிண்டல் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த படத்தை இந்த தேர்தல் நடைமுறைகள் முடியும் வரைக்கும் நிறுத்தி வைக்கவேண்டும் என்று சென்னை உயர்நிதி மன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அதாவது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் TN 2026 படத்தை வெளியீட அனுமதித்தால் வாக்காளர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஒரு நியாயமான தேர்தல் பாதிக்கும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால், தேர்தல் நடைமுறைகள் முடியும் வரைக்கும் இந்த படத்தை வெளியீட்டை தடுக்க வேண்டும் என, ஏப்ரல்-06-இல் கொடுத்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று காலை தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஏற்கனவே இந்த படம் வெளியாகிவிட்டதால் மேற்கொண்டு இந்த மனு செல்லத்தக்கதல்ல எனவே தன்னுடைய மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து இந்த மனுவை தள்ளுபடி செய்து தற்போது உத்தரவிட்டுள்ளனர்.