வாக்காளர்களை கவர்வதற்காக திமுகவினர் 08 ஆயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம்; நீதிமன்றத்தில் தவெக முறையீடு..!
Seithipunal Tamil April 17, 2026 05:48 AM

தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வாக்காளர்களுக்கு 08 ஆயிரம் ரூபாய்க்கான பரிசு கூப்பன்களை விநியோகித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களை கவர்வதற்காக திமுக வேட்பாளர்கள் 08 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்களை விநியோகித்து வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஜி.அருள்முருகன் அமர்வில்  தவெக வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையிட்டுள்ளார்.

அத்துடன், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகர் சார்பில் வாக்காளர்களுக்கு ரொக்க பணம் வழங்குவதற்கான டோக்கன்களை விநியோகித்து வருவதாக வழக்கறிஞர் ஷியாம் குமார் என்பவர் முறையிட்டுள்ளார்.

இந்த முறையீடுகளை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மனுக்களாக தாக்கல் செய்தால் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.