தமிழக அரசியல் களம் அனல் பறந்து வரும் நிலையில், விசிக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக மேடையிலேயே பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் பேசியதைச் சுட்டிக்காட்டிய ஆதவ், “இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நள்ளிரவு 12 மணிக்கு பிரேமலதா அம்மாவோ அல்லது ஒரு பெண் காவலரோ ஆர்.கே. நகர் பகுதியில் தனியாக நடந்து செல்ல முடியுமா?” என்று சவால் விடுத்துள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் எதற்காக திமுக-வை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ, அந்த லட்சியத்தை மறந்து இன்று அதே குடும்பத்திற்காகப் பேசுவது கேப்டனின் ஆன்மாவையே வருத்தமடையச் செய்யும் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அதன் குறைகளைச் சுட்டிக்காட்டும் ‘துரந்தர்’ (உளவாளி) போல பிரேமலதா செயல்படுவதாகவும் அவர் முன்வைத்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.