விட்டாச்சு லீவு... இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம்!
Dinamaalai April 17, 2026 09:48 AM

குஷியில் மாணவர்கள்...போடுங்க வெடிய என்று சொல்வதைப் போல தமிழகத்தில் தேர்தல் திருவிழாவோடு, மாணவர்களின் கொண்டாட்டங்களும் ஆரம்பமாகிறது. இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை துவங்குகிறது.

ஏப்ரல் 23-ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய முழு ஆண்டுத் தேர்வுகள், நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதாலும், பல பள்ளிகள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ளதாலும் கல்வித்துறை இந்த வேகமான முடிவை எடுத்தது. வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், வீட்டுப்பாடம் மற்றும் அதிகாலை பள்ளிக்கு ஓடும் டென்ஷன் இல்லாத குஷியில் மாணவர்கள் இப்போதே உற்சாகமாகி விட்டனர்.

சுமார் ஒன்றரை மாத கால விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் இனி தேர்தல் பணிகளில் பிஸியாகி விடுவார்கள் என்பதால், மாணவர்கள் தங்களது விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுவரை புத்தகப் பைகளை ஓரமாக வைத்துவிட்டு, சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் கிளம்ப இப்போதே பல குடும்பங்கள் தயாராகிவிட்டன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.