“என்னை மாதிரி துணிச்சல் இருக்கா?” மக்கள் பிரச்சனைக்கு என்னைக்காவது வந்திருக்காரா? – விஜய்யை நேருக்கு நேர் வம்புக்கு இழுத்த பிரகாஷ் ராஜ்..!!
SeithiSolai Tamil April 17, 2026 12:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் எழுப்பியுள்ள சரமாரி கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளன.

தவெக-வின் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்த அவர், “விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்பது வெறும் சினிமா கவர்ச்சியா அல்லது உண்மையான மக்கள் சேவையா?” என்ற தொனியில் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, “தமிழக மக்கள் பல்வேறு இக்கட்டான சூழல்களைச் சந்தித்தபோது அவர்களுக்காகக் களத்தில் இறங்கி நின்றதுண்டா? என் அளவிற்குப் பொதுவெளியில் துணிச்சலாக அரசியல் பேசியதுண்டா?” என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

நடிகர் விஜய்யுடன் ‘கில்லி’ போன்ற படங்களில் இணைந்து நடித்தவர் என்ற முறையிலும், விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்து பிரகாஷ் ராஜ் வைத்துள்ள இந்த ‘நேரடி அட்டாக்’, தற்போது சமூக வலைதளங்களில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே ஒரு பெரிய விவாதப் போரையே தொடங்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.