கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. வால்பாறை செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த நிலையில் கோழிக்கோட்டில் இருந்து வால்பாறைக்கு 16 பேருடன் ஒரு சுற்றுலா வேன் சென்றுவிட்டு, மீண்டும் கோழிக்கோடு செல்வதற்காக பொள்ளாச்சி நோக்கி மீண்டும் இறங்கி வந்துள்ளது. அப்போது 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், கவிழ்ந்து விழுந்தது. மேலும் மலைச்சரிவில் உருண்ட அந்த வேன், நேராக 10வது கொண்டை ஊசி வளைவு சாலையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து அவ்வழியாக சென்ற பயணிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். இதில் மேலும் பலர் உயிரிழக்கலாம் என அஞ்சிய நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
S P Velumani வெல்வாரா? | கோவை தொண்டாமுத்தூர் களநிலவரம் என்ன்? | Ground Report | IPS On Road | #74