இது ஜப்பானோ? வேறு நாடோ அல்ல… நம்ம சென்னை தான்… சாலையில் அழகாக பூத்துக் குலுங்கும் பிங்க் பூக்கள்… வைரலாகும் வீடியோ…!!!!
SeithiSolai Tamil April 18, 2026 12:48 AM

வெயில், டிராபிக், பரபரப்பு என எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தற்போது ஒரு கனவு தேசத்தைப் போல பிங்க் நிறத்தில் ஜொலித்து வருவது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ராம் என்பவர், சென்னை மதுரவாயல் மேம்பாலத்திற்கு அருகே டிரோன் மூலம் எடுத்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அதில், சாலைகளின் இருபுறமும் பிங்க் நிறப் பூக்கள் அடர்த்தியாகப் பூத்து குலுங்க, அதற்கிடையே வாகனங்கள் செல்லும் காட்சி ஜப்பானின் புகழ்பெற்ற ‘செர்ரி பிளாசம்’ திருவிழாவை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Venkatesh Ram (@venkateshram_)