மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹிகா சர்மா தாமதமாக வந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி பேருந்து நீண்ட நேரம் காத்திருந்ததாகச் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. மஹிகாவுக்காக ஒட்டுமொத்த அணியும் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தது என்றும், அவருக்குப் பின்னால் பாண்டியா பேருந்தில் ஏறியதாகவும் பரவிய இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
ஆனால், இந்த வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தபோது அது வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது. மஹிகா சர்மா ஏறியது வீரர்களுக்கான அதிகாரப்பூர்வ பேருந்து அல்ல, அது குடும்ப உறுப்பினர்களுக்கான தனி வாகனம் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் அவருக்குப் பின்னால் வருவது ஹர்திக் பாண்டியா இல்லை என்பதும், அணி நிர்வாகத்தின் பயணத் திட்டத்தில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை என்பதும் ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.