ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இச்செய்தியைப் பகிர்ந்துள்ள 27 வயதான ரஷித் கான், “என் குட்டி இளவரசரே, உலகிற்கு வருக” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தனது மகனுக்கு ‘அஸ்லான் கான்’ (Azlan Khan) என அவர் பெயரிட்டுள்ளார். மேலும், தனது குடும்பத்திற்காகப் பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஷித் கான், களத்திலும் தனது சுழற்பந்து வீச்சால் அசத்தி வருகிறார்.
அவர் அணியின் ஜெர்சி எண்ணான 19-ஐ அவரது மகனுக்கும் சூட்டி, கிரிக்கெட் உலகிற்கு வரவேற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
