தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நயன்தாரா (Nayathara). இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவரின் நடிப்பில் உருவாகியுள்ள பீல் குட் திரைப்படம்தான் “ஹாய்” (Hi). இப்படத்தில் நயன்தாரா லீட் நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் கவின் (kavin) நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ், ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது. இந்த படமானது குறைவான பட்ஜெட்டில் தயாராகியிருந்தாலும், சிறப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் (Jen Martin) இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் “கண்ணுக்குழியா” (Kannukuzhiya) வரும் 2026 ஏப்ரல் 21ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் இப்பாடலை யார் பாடியுள்ள என்பது குறித்த புரோமோ வீடியோவை இன்று (18/04/2026) வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் கூட்டணி அமைக்கும் ஜெய் பீம் படக்குழு… சூர்யாவின் அடுத்தப் பட அப்டேட் இதோ!
#Kannukuzhiya – Coming in the sweetest vocals of the one and only @gvprakash ❤️#HiMovie first single from Tuesday, 21st April!
A @jenmartinmusic Musical.@Kavin_m_0431 @VishnuEdavan1 @ZeeStudios_ @Rowdy_Pictures #UmeshKrBansal @girishjohar @kejriwalakshay @TheVinothCj… pic.twitter.com/GQ330LErPG
— Seven Screen Studio (@7screenstudio)
ஹாய் படத்தின் முதல் பாடலான கன்னகுழியே என்ற பாடலை இசையமைப்பாளரும் பாடகருமான் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். இந்த பாடலின் வரிகளை படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன்தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படலானது வரும் 2026 ஏப்ரல் 21ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலில் கவின் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர்? அட இவர்தான்!
ஹாய் படமானது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக தயாராகிவந்தது. இந்த படமானது பீல் குட் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் நயன்தாரா மற்றும் கவினுடன் நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குரேஷி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தய் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.