பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைத் தாக்கி நடிகர் சத்யராஜ் பேசியுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
(ஏப். 18) பெரம்பூரில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய சத்யராஜ், “வெறுமனே சினிமாவில் நடித்துவிட்டு, இப்போது ஓட்டு கேட்க வருபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். மக்களுக்காகக் களத்தில் நின்று போராடுபவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். என்னைக்கூட உங்களால் எப்போது வேண்டுமானாலும் பார்த்துவிட முடியாது, அப்படி இருக்கையில் இவரை நீங்கள் எங்கு போய் பார்ப்பீர்கள்?” என்று விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் மிகக் கடுமையாகச் சாடினார்.
ஏற்கனவே சத்யராஜ்யின் மகள் திவ்யா சத்யராஜ், சமீபத்தில் விஜய்க்குச் சவால் விடுத்திருந்த நிலையில், தற்போது சத்யராஜின் இந்தத் தாக்குதல் தவெக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“>