தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் பாதுகாப்புக் காவலர் ஒருவர், இரவு நேரத்தில் கொசுக்கடி தாங்க முடியாமல் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாகத் தூங்கும் போது பயன்படுத்தும் கொசுவலையை, அவர் தனது சீருடையின் மேலேயே போர்த்திக்கொண்டு, வலைக்கு உள்ளிருந்தபடியே தனது பணிகளைச் செய்து வருகிறார்.
தன்னைக் கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள அவர் மேற்கொண்ட இந்த ‘வலைத் திட்டம்’ அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது.
“கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இதைவிடச் சிறந்த ஐடியா இருக்க முடியாது” என நெட்டிசன்கள் இந்தக் காவலரின் சமயோசித புத்தியைப் பாராட்டி வருகின்றனர்.
அதே சமயம், கொசுத் தொல்லை எந்த அளவிற்கு ஒரு மனிதனைப் பாடாய்ப்படுத்துகிறது என்பதையும் இந்த வீடியோ உணர்த்துவதாகப் பலர் பதிவிட்டு வருகின்றனர்.