பொதுவாக கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால்,அந்த கோடையில் முடி உதிர்தல் என்பது சாதாரணமான ஒன்று தான்.
எனவே அந்த கோடை காலத்தில் முடி ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது குறித்து சில குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1.சிலருக்கு தலையில் வியர்வை அதிகரித்தால் முடி அதிகமாக உதிரும்.
2.சிலருக்கு உடலின் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அது உடல் தலை வரை சென்று தலையில் இருந்து முடி கன்னாபின்னாவென்று கொட்டும்.
3.இந்த கோடை வெப்பத்தால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்காமல் இருப்பதால் முடி வளராமல் முடி கொட்டும்.
4.சிலர் ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகளை உண்டு வருவர் ,இப்படிப்பட்ட உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
5.சிலர் ஈஸ்டோரஜன் மருந்துகள் அதிகம் உட்கொள்வர் .இப்படி உட்க்கொள்வதால் முடி உதிரும்.
6.சிலர் தள்ளிப்போகும் மாதவிடாயிற்கு மருந்து எடுத்துக்கொள்வர் .இப்படிப்பட்ட ஒரு சில மருந்து வகைகளால் உடல் சூட்டு அதிகரித்து, முடி உதிர்வு அதிகரிக்கும்.
7.சிலருக்கு ஸ்கின் பிரச்சினையான சோரியாஸ் இருக்கும் .இந்த நோய் வந்தால் உடனே வைத்தியரை நாட வேண்டும்.
8.முடி உதிராமல் கோடையில் இருக்க தினசரி தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும்.
9.சிலர் அதிகமாக உடற்பயிற்சி செய்வர் .இப்படி செய்பவர்களுக்கு தலையின் அடிப்பகுதியில் வியர்வை அதிகரிக்கும்.
10.ஆகவே வியர்வை வரும்போது ஒரு துணியை வைத்து அப்போழுதே துடைத்துக் கொள்ள வேண்டும்.